இராஜபாளையம் என்ற இராஜ ஆலயம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உற்சாக பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


இராஜபாளையம் என்ற இராஜ ஆலயத்தில் நான் போட்டியிட என்ன காரணம் என்று அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் மே மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், " இராஜபாளையம் மக்கள் ஆன்மீக வழிபாட்டில் நம்பிக்கை உள்ள மக்கள். அதனால் தான் இராஜபாளையம் என்ற இராஜ ஆலயத்தில் நான் போட்டியிட முடிவு செய்தேன். 

எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் முதலில் எங்களின் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்யுங்கள் என்று தான் அழைக்கிறார்கள். தற்போது வரை பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டேன். மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பை அளிக்கின்றனர் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Rajapalayam Minister Rajendra Balaji Election Campaign TN Election 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->