இராசபாளையம் பகுதியில் கொற்றவை சிலை.. மக்கள் வழிபாடு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் மாங்குடி பெருமாள்பட்டி அருகேயுள்ள ஆவுடையாபுரம் பகுதியை சார்ந்தவர் கருப்பையா. இவர் தனது விவசாய நிலத்தை உழுதுகொண்டு இருந்த நிலையில், 6 அடி கொற்றவை சிலை கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிலையின் நான்கு கைகளும் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

தெந்தமிழகத்தில் கண்டறியப்பட்ட முதல் சிலையாக இது இருக்கும் நிலையில், மிகவும் அழகாக இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது. வடஇந்தியாவை பொறுத்த வரையில் கொற்றவைக்கு சிங்கம் மற்றும் புலி போன்றவை வாகனமாக காட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கலைமான் கொற்றவையின் வாகனமாக இருந்து வருகிறது. 

வடதமிழகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கொற்றவை சிலையும் மான் வாகனத்துடன் சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது. தென் தமிழகத்தில் கொற்றவை சிலையுடன் கலைமான் வாகனமாக கிடைத்துள்ள முதல் சிலை இதுவே ஆகும்.

கொற்றவை குறித்து சங்க இலக்கியம் மற்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்புக்கள் உள்ளது. கொற்றவை பாலை நிலத்தில் வாழ்ந்த மக்களின் பிரதான கடவுள் மற்றும் போர் தெய்வமாக இருந்துள்ளதும், தற்போதைய சூழலில் கொற்றவையின் வழிபாடு பிடாரி, காளி, துர்கை போன்ற கடவுளின் வழிபாட்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Kotravai statue identified in Rajapalayam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->