275 சவரன் நகை, ரூ.45 இலட்சம் ரொக்கம் கொடுத்தும் போதவில்லை... மனைவியை கொலை செய்து நாடகம்?..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பாயூரணி பகுதியைச் சார்ந்தவர் ஆறுமுகச்சாமி. இவரது மகள் கவிநிலா. சிவகாசியில் இருக்கும் பிரபல பேக்கரி கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் துளசிராம். துளசிராமுக்கும், கவிநிலாவிற்கும் கடந்த 2014 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

திருமணத்தின்போது கவிநிலாவின் பெற்றோர் 230 சவரன் நகை வழங்கியுள்ளனர். மேலும், சீமந்தத்தின் போது 45 சவரன் நகையும் வழங்கியுள்ளனர். தற்போது இவர்களுக்கு இரண்டு வயதுடைய ஆண் குழந்தை மற்றும் 9 மாத பெண் குழந்தையும் இருக்கிறது. 

இந்த நிலையில், துளசிராமன் மனைவி கவிநிலாவிடம் அதிகமான வரதட்சணை வேண்டும் என்று கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது பெற்றோர்களின் இல்லத்திற்கு சென்றுள்ளார். 

பின்னர் விஷயத்தை புரிந்துகொண்ட கவிநிலாவின் பெற்றோர் சமாதானம் செய்து, மீண்டும் துளசிராமனின் இல்லத்திற்கு கொண்டு சென்று ரூ.45 இலட்சம் பணமும் வழங்கிவிட்டுவிட்டு வந்துள்ளனர்.  இதற்குள்ளாகவே கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கவிநிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான கவிநிலாவின் பெற்றோர், அங்கு சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அவரின் உடல் இருந்துள்ளது. இதனையடுத்து மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆறுமுகசாமி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar girl KaviNila Murder by husband due to Dowry Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal