காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ போட்ட தங்கங்கள்... அலேக்காக தூக்கிய வனத்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையடிவாரத்தில் அம்மையப்பர் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையில் பணியாற்றி வரும் நபர்கள் என்று கூறிய இரண்டு பேர், வீடியோ காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டனர். 

இது குறித்த வீடியோ காட்சிகள், சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள நீர்கொடிகையை வெட்டி நீர் அருந்துவது போலவும், இறைவனின் படைப்புகள் எப்படி இருக்கிறது என்று பேசியும் வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும், வனத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோ காட்சி வனத்துறையினரிடம் கிடைத்துள்ளது. இதன்பின்னர் வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வத்திராயிருப்பு பகுதியை சார்ந்த நாகராஜ் மற்றும் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சார்ந்த மாலையன் என்பது தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறைஅனர், இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, அத்துமீறி காட்டுக்குள் நுழையமாட்டோம் என்றும், மூலிகைகளை வெட்ட மாட்டோம் என்றும் வீடியோ எடுத்து வெளியிடவைத்து அனுப்பி வைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar forest dept arrest 2 culprit illegal entry at forest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->