மைக்ரோ பைனான்ஸ் கந்துவட்டி வசூல்.. சூடான பாலை சிறுமியின் மீது ஊற்றிய கொடூரர்கள்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி நிறுவனம் சார்பாக, மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் சிறு தொழில் செய்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாரக்கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே தேனீர் கடை நடத்தி வருபவர் அர்ஜுனன். இவரது மனைவி கலைமதி. இவர்கள் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனியிடம் ரூபாய் 35 ஆயிரம் கடன் பெற்றுள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 6 மாதமாக கடன் தொகையை செலுத்த இயலாமல் இருந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக தேநீர் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். 

இதன்போது தவணை தொகையான ரூ.1950 செலுத்துவதற்கு பதிலாக ரூ.1300 ரூபாய் கட்டியுள்ளனர். மீதமுள்ள 650 ரூபாய் பணத்தை கேட்டு கந்துவட்டிக்காரர்கள் தகராறு செய்யவே, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கந்துவட்டி கொடூரர்கள் தேநீர் கடையில் இருந்த சூடான பால் பாத்திரத்தை எடுத்து பெண்ணின் மீது ஊற்றவும் முயற்சி செய்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் கலைமதியின் மகள் ஸ்ரீ வர்தினி மீது பால் ஊற்றியுள்ளது. இதனால் உடல் வெந்து போய் காயமடைந்து, அங்குள்ள இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பைனான்ஸ் நிறுவனம் ஆட்களைக் கொண்டு மிரட்டுவதாகவும், தகாத வார்த்தைகளை பேசி வருவதாகவும் கலைமதி குற்றம் சாட்டியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Finance Loan Torture Hot Milk Attack Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->