விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தனியார்‌ மருத்துவமனைகள்‌..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌ சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " விருதுநகர்‌ மாவட்டத்தில்‌ தமிழக முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ கொரோனா சிகிச்சைக்கு கீழ்க்கண்ட தனியார்‌. மருத்துவமனைகள்‌ தமிழக அரசினால்‌ அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சை பெற விரும்புவோர்‌ மேற்படி மருத்துவமனைகளில்‌ அனுமதிக்கப்படும்போது காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ அடையாள அட்டையை காண்பிக்கவேண்டும்‌ மற்றும்‌ மருத்துவ விருப்பப்படிவம்‌ நிரப்பப்‌ படவேண்டும்‌.

மருத்துவமனையில்‌ உள்ள காப்பிட்டுத்திட்ட அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட காப்பீட்டுத்‌ திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம்‌. மேலும்‌, விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்ட அடையாள அட்டை தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்‌: 1077-ஐ பொதுமக்கள்‌ தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையாள அடையாள அட்டை தொடர்பான விளக்கங்களை பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

மேற்படி கொரோனா சிகிக்சைக்கு அரசினால்‌ நிர்ணயித்துள்ள கட்டணங்கள்‌ குறித்த விவரங்கள்‌ சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில்‌ பொதுமக்கள்‌ பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மருத்துமனை நிர்வாகம்‌ கொரனா நோயாளிகளிடம்‌ மேற்படி கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும்‌.

அரசினால்‌ நிர்ணமித்துள்ள கட்டணங்களை விட கூடுதலாக வசூல்‌ செய்தால்‌ கட்டணமில்லா தொலைபேசி எண்‌:1800 425 3993 மற்றும்‌ 104 ஆகிய தொலைபேசி எண்களில்‌ தொடர்புகொண்டு பொதுமக்கள்‌ புகார்‌ அளிக்கலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு http://www.cmchistn.com/ என்ற இணையதள முகவரியில்‌ தெரிந்து கொள்ளலாம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ 'திரு.இரா.கண்ணன்‌..இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌ " என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசினால்‌ அங்கீகரிக்கப்பட்டுள்ள தனியார்‌ மருத்துவமனைகள்‌ விவரம்‌:

1. அமர்‌ மருத்துவமனை, அருப்புக்கோட்டை.

2. ஸ்ரீராம்‌ சுகஸ்தலா மருத்துவமனை, அருப்புக்கோட்டை.

3. கோமதி மருத்துவமனை, அருப்புக்கோட்டை.

4. விமலா மருத்துவமனை, அருப்புக்கோட்டை.

5. சிட்டி மருத்துவமனை, அருப்புக்கோட்டை.

6. VVVNC மருத்துவமனை, விருதுநகர்‌.

7. சிவசங்கர்‌ மருத்துவமனை, விருதுநகர்‌.

8. தனுஷ்கோடி மருத்துவமனை, சாத்தூர்‌.

9. சுருதி மருத்துவமனை, சிவகாசி.

10. சிவகாசி கோவிட்‌ ஹெல்த்‌ சென்டர்‌, சிவகாசி.

11. SBJ ஹெல்த்‌ சென்டர்‌, சிவகாசி.

12. MSB மருத்துவமனை, திருத்தங்கல்‌.

19. குமரன்‌ மருத்துவமனை, திருத்தங்கல்‌.

14. ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை, இராஜபாளையம்‌.

15. சத்யா சூப்பர்‌ ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, இராஜபாளையம்‌.

16. மீனாட்சி நினைவு மருத்துவமனை, இராஜபாளையம்‌.

17. சென்னை மருத்துவமனை, இராஜபாளையம்‌.

18. ஆரா மருத்துவமனை, இராஜபாளையம்‌.

19. பாரி மருத்துவமனை, இராஜபாளையம்‌.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar District Govt Official Corona Treatment for Private Hospital Announcement 29 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->