18 வருட திருடனை பிடித்த காவல் துறை... கொள்ளையடித்த பணத்துடன் பெண்களிடம் உல்லாசம்... விசாரணையில் பகீர்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர், மதுரை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தொடர் புகார்கள் பதிவாகி வந்தது. அலைபேசிகள், கோவில்களில் கொள்ளை என பல வழக்குகள் பதிவாகியுள்ளது. 

இந்த தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர், ஒரே மாதிரியாக கைவரிசை காண்பித்து வந்த நிலையில், ஒரே நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது காவல் துறையினருக்கு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மதுரை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் வினோதினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும், விருதுநகரில் உள்ள ஆமாத்தூர் ஜவுளி கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் கண்காணிப்பு காட்சிகளில் உள்ள விஷயத்தை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டி முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சார்ந்த கள்ளராமன் (வயது 65) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கள்ளராமனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், கடந்த 2002 ஆம் கள்ளராமனின் மனைவி உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 18 வருடமாக திருட்டு செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவரின் மீது 40 வழக்குகள் உள்ள நிலையில், குண்டர் சட்டத்தில் கைதாகிய கள்ளராமன், கடந்த செப்டம்பர் மாதத்தில் விடுதலையாகியுள்ளான். 

இதனைத்தொடர்ந்து மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், உணவகம், அங்கன்வாடி, செல்போன் கடை, ஜவுளிக்கடை என பல இடங்களிலும் கைவரிசை காண்பித்துள்ளான். திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் உள்ள கோவிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதியாகியுள்ளது. 

கைதான கள்ள ராமனுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமான நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு மனைவி சுப்புலட்சுமி இறந்து விட்டார். அதன் பிறகு கடந்த 18 ஆண்டுகளாக கள்ள ராமன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, கொள்ளையடித்த பணத்தை வைத்து 20 க்கும் மேற்பட்ட பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், இவனிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 இலட்சம் ரொக்கம், 94 வெண்கல மணிகள், குத்துவிளக்கு, சிலிண்டர் போன்ற பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar 18 year Robbery Thief Arrest by Police 12 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->