விராலிமலை ஜல்லிக்கட்டில் முதலிடத்தை பெற்று வெற்றிவாகை சூடிய நபர்.! கின்னஸ் சாதனை., இரட்டை திருவிழா கொண்டாட்டம்.!!   - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தப்பட்டது. இப்போட்டியை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்.  

2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி உலக சாதனைக்காக நடத்தப்பட்டது.கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டனர்.  

இந்த போட்டியின் போது, மாடு முட்டியதில் சொரியம்பட்டியை சேர்ந்த ராமு(25) மற்றும் சதீஷ்குமார்(43) ஆகிய பார்வையாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தியது.  

இந்நிலையில், விராலிமலை ஜல்லிக்கட்டில் 21 காளைகளை பிடித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம் முதலிடம் பிடித்தார். அதேபோல, திருச்சி காட்டூரை சேர்ந்த கார்த்தி என்பவர் 16 காளைகளை பிடித்து 2ம் இடத்தை பிடித்தார்.
 
மேலும், இப்போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viralimalai jallikattu program first and second price


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal