டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த கொம்பேறி மூக்கன்.. ஸ்டாப்பிங் வந்ததும் தலையை தூக்கியதால் பயணிகள் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


ஓட்டுனரின் இருக்கைக்கு அடியில் இருந்த பாம்பு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வரை இலவச பயணம் செய்து இறுதியில் பிடிபட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவலூர்பேட்டை பகுதியில் இருந்து, நேற்று காலை திருவண்ணாமலைக்கு பேருந்து புறப்பட்டு வந்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து திருவண்ணாமலை பேருந்து நிலையம் வந்த சமயத்தில், ஓட்டுனரின் இருக்கைக்கு அடியில் இருந்த பாம்பு திடீரென வெளியே வந்தது. 

சுமார் 3 அடி நீளம் கொண்ட பாம்பு பயணிகளை கண்டதும் வேகமாக ஊர்ந்து செல்ல முயற்சித்த சமயத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பாம்பை கண்டு பயத்தில் அலறினர். சிலர் காத்துக்கொண்டே பாம்பை அடிக்க முயற்சி செய்துள்ளனர். 

இதற்குள்ளாக வளைந்து நெளிந்து தப்பிக்க முயன்ற பாம்பு பேருந்தின் மேற்கூரைக்கு சென்றுள்ளது. அங்கு தனது தலையினை தூக்கி ஆவேசத்தில் நின்றது. இந்த விஷயம் தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகளுக்கு சில நிமிடம் பாம்பு போக்கு காட்டிய நிலையில்,  அதிகாரிகள் இலாவக பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். அவலூர் பேட்டையில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் புகுந்த பாம்பு திருவண்ணாமலையில் பிடிபட்டுள்ளது. 

பேருந்து பயணத்தின் போது நல்ல வேலையாக பாம்பு யாரையும் தீண்டவில்லை. ஓட்டுனரின் இருக்கைக்கு அடியில் இருந்த பாம்பு அப்படியே இருந்ததால் ஓட்டுனரின் உயிரும் தப்பித்தது. பிடிபட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையை சார்ந்தது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram To Tiruvannamalai Bus Travel Snake Travels Under Driver Seat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->