காட்டுப்பன்றி தாக்கி விவசாயி உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அருகே விளைநிலத்திற்க்கு காவலுக்கு சென்ற விவசாயி காட்டுபன்றி தாக்கி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவணத்திற்கு அருகில் உள்ளது எர்பாக்கம் கிராமம். இங்கு பெரும்பாலனவர்கள் விவசாயத்தையே வாழ்வதாரமாக கொண்டுள்ளனர். விவசாயிகள் பல ஏக்கர் நிலபரப்பில் பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில், விவசாய நிலங்களை காட்டு பன்றிகள் மற்றும் ஏனைய விலங்குகள் நாசம் செய்துவருகின்றன. இதனால் பயிர்கள் பாழாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

இந்நிலையில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 60). இரவு நேரங்களில் தனது விளைநிலத்திற்கு சென்று காவல் பணியில் ஈடுபடுவது அவரின் வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல் செல்வராஜ் தனது நிலத்திற்க்கு காவலுக்கு சென்றுள்ளார். 

இதன்போது, அவர் நிலத்தில் மறைந்திருந்த காட்டுபன்றி அவரை தாக்கியுள்ளது. அதனிடம் இருந்து தப்பிக்க அவர் ஓடியுள்ளார். இருந்தும் அந்த காட்டுபன்றி அவரை துரத்தி கடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். காட்டுபன்றி தாக்கி விவாசாயி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Tindivanam Forest Pig Attack Farmer Died on Spot Police Investigation Going On


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->