தமிழகத்தில் திருட்டுத்தனம்.. ஆந்திராவில் சாமியார்.. ஆசிரமம் அமைக்க வந்தவனை, கோழியை போல அமுக்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


வாலிபரிடம் ரூ.10 இலட்சம் மோசடி செய்ய முயன்ற புதுச்சேரியைச் சேர்ந்த போலிச்சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

புதுச்சேரி மாநிலத்திலுள்ள குருமாம்பட்டு பகுதியை சேர்ந்தவன் சரவணா முத்து ரமேஷ் (வயது 53). இவரின் மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு, மோசடி தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஆந்திர மாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளான். 

அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தின் கண்டிபள்ளி கிராமத்தில் இருக்கும் ஆசிரமத்தில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து தாடி மீசையுடன் தப்பி சென்ற ரமேசை சாமியார் என்று எண்ணி ஆசிரமவாசிகள், அவருக்கு தேவையான உதவியை செய்யவே, அங்கு வந்த பக்தர்களும் அவர்களிடம் ஆசி வாங்கிச் சென்றுள்ளனர். 

இதனையடுத்து, ஆந்திராவில் ஸ்ரீ சரவணமுத்து ரமேஷ் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டு, ஓசி சோறு சாப்பிட்டு வந்துள்ளான். இந்நிலையில், ஆசிரமம் அருகில் இருந்த தேனீர் கடை நடத்தி வந்த துளசி நாயர் என்பவரின் மகன் ரவீந்திரநாத், கடந்த இரண்டு வருடமாக சாமியாருக்கு தேநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து வந்துள்ளான். 

அவ்வப்போது சாமியாரின் கை செலவிற்கு பணமும் கொடுத்து வந்த நிலையில், ரவீந்திரநாத்திடம் நிறைய பணம் இருப்பதை அறிந்து கொண்ட சாமியார், திருட்டுப் புத்தி கொண்டு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து புதிய தொழில் தொடங்கி இலட்சாதிபதி ஆகும் யோகம் வந்துள்ளது என்றும், ரூ.10 இலட்சம் கொண்டு வந்தால் புதுச்சேரியில் நானே தொழில் தொடங்கி வைக்கிறேன் என்றும் கூறியுள்ளான். 

இதனை நம்பிய ரவீந்தரும் ரூபாய் 10 இலட்சம் பணத்துடன் காரில் புதுச்சேரிக்கு வந்த நிலையில், விழுப்புரத்தில் ஓய்வு எடுத்து பயணத்தை தொடங்கலாம் என சாமியார் கூறியுள்ளார். இந்நிலையில், உறக்கத்தின் போது சாமியார் பணத்தை எடுத்து விட்டு காரில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், கண்விழித்துப் பார்த்த போது சாமியார் பணத்துடன் ஓடி விட்டதை அறிந்து ரவீந்திரநாத் அழுது புலம்பியுள்ளார். 

பின்னர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திருடனாக இருந்து, ஆந்திராவில் சாமியாராக மாறி இருந்த ரமேஷ், புதுச்சேரியில் ஆசிரமம் தொடங்கும் திட்டத்துடன் வந்தது தெரியவந்துள்ளது. 

மேலும், நிலம் தொடர்பான பத்திர பதிவு செய்ய ரவிந்திரநாத் வந்ததும் உறுதியானதால், கண்டமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்ட ஆத்திரத்தில், கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கவே, தற்கொலை முயற்சியை தடுத்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Pondicherry Robbery man Andra Pradesh Become Fake Magician 31 Jan 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->