ஒருவருட திருட்டுக்கு எண்ட் காடு போட்ட காவல்துறை.. ஆரோவில் மக்கள் நிம்மதி.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான ஆரோவில், கடந்த ஒரு வருடமாக தனியாக இருக்கும் பங்களா வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் செயலானது தொடர்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் சிற்றம்பலம் பகுதியில் உள்ள சசிகுமார் என்பவரின் வீட்டில், பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த டவுசர் கொள்ளையர்கள், கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரின் தாயார் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் வீட்டில் இருந்து 39 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். 

சசிகுமார் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தனிப்படை அமைத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் ஆரோவில் உள்ள சாலையில் தனியார் விடுதி அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்ற புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற நபரை கைது செய்தனர்.

 

இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், நான் தான் ஒரு வருடமாக ஆரோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளான். மேலும், கொள்ளையடிக்கும் நகைகளை பணமாக மாற்ற வேலூரை சார்ந்த ஆறுமுகம் உதவி செய்ததாகவும் தெரிவித்துள்ளான். 

இதனையடுத்து பாலகிருஷ்ணன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், " இரவு நேரத்தில் வந்து உடைகளை சவுக்குத்தோப்பு பகுதியில் கழற்றி வை வைத்துவிட்டு, வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் ஏற்கனவே தமிழகம் மற்றும் பெங்களூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் கைதாகி சிறையில் இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Pondicherry Auroville Monkey Cap Thief Arrest by Police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->