நூறு நாள் திட்டத்தால் பயனென்ன?. விவசாயம் செய்ய வாருங்கள் - சீமான்.! - Seithipunal
Seithipunal


100 நாள் வேலை திட்டத்தால் என்ன பயன்? அனைவரும் விவசாயம் செய்ய முன்வர வேண்டும் என சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகளிடையே உரையாற்றிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கொள்கை, கோட்பாடு அடிப்படையில் செயல்படுவதன் தொடர்ச்சி தான் வெற்றி. சமரசம் செய்து வாக்குகளுக்கு காசு கொடுத்து பெறுவது வெற்றி கிடையாது. தேர்தல் வெற்றியை எண்ணி நாங்கள் இருக்கிறோம். நிரந்தர வெற்றியை தேடி போராடுகிறோம். 

வாக்கு விழுக்காடு படி நாங்கள் வளர்த்துக்கொண்டு வருகிறோம். நாங்கள் சீட்டுக்காக வரவில்லை, நாட்டினை கைப்பற்ற வந்துள்ளோம். ஜனநாயக உண்மையோடு தேர்தலை எதிகொள்ள முடியாத பட்சத்தில், என்ன நிர்வாகம் நீங்கள் செய்கிறீர்கள்?. அனைவருக்கும் சமவாய்ப்பு வேண்டும். எங்களை பார்த்து ஏன் பயம் கொள்கிறீர்கள்?. 

வேளாண் சட்டம், வேளாண் மக்களுக்கு மட்டும் பாதிப்பு என தெரிவிப்பது பைத்தியக்காரத்தனம். நூறுநாள் வேலை திட்டத்தால் என்ன பயன் உள்ளது?. எத்தனை ஏரிகள், குளங்கள் தமிழ்நாட்டில் தூர்வாரப்பட்டுள்ளன?. எத்தனை மரங்கள் வளர்க்கப்ட்டுள்ளது?. பயன் இல்லாத திட்டத்தால் கண்மாய்கரையில் ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள், பெண்கள் புறணி பேசுகிறாரார்கள். அது தண்ட சம்பளம். அதனால் விவசாய பணிகள் செய்ய ஆட்கள் இல்லை. 

நீங்கள் ஊதியமாக ரூ.100, ரூ.200 தரலாம். அரிசி, பருப்பு, தக்காளி, வெண்டைக்காய் போன்றவை எங்கிருந்து வரும்?. வறுமையை போக்க அனைவரும் விவசாயம் செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram NTK Seeman Speech Against 100 Days Work Process


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->