மாமியாரை கள்ளகாதலியாக்கி, மகளை திருமணம் செய்த காமுகன்.. மாமியார் சிறகடித்ததால், இரண்டாம் கணவன் கொலை.! - Seithipunal
Seithipunal


மாமியாரின் மீதுள்ள மோகத்தால், அவரின் இரண்டாவது கணவரை கொலை செய்த மருமகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சித்ரா (வயது 39). சேகர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், சித்ராவிற்கு 13 வயது இருக்கும்போதே சேகருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இதனால், தற்போது 39 வயதாகும் சித்ராவுக்கு 24 வயதில் கவுசல்யா என்ற மகளும், 22 வயதில் சக்திவேல் என்ற மகனும் இருக்கின்றனர். கௌசல்யாவுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில், சக்திவேலுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில், கௌசல்யாவின் கணவர் சோனு சர்மாவுக்கும், கவுசல்யாவின் தாயான சித்ராவிற்கும் இடையே தகாத உறவு இருந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில், சித்ராவுக்கும் - விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வரும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாலமுருகனை சித்ரா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோனு சர்மா, மாமியார் சித்ராவிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதன்போது ஏற்பட்ட தகராறில், பாலமுருகனை சோனு சர்மா கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 

இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியான நிலையில், பாலமுருகனை காப்பாற்ற முயன்ற சித்ராவின் கையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. விசாரணையில், தனது மாமியார் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், அவருடன் கொண்ட கள்ளக்காதல் பழக்கம் இனி கைகூடாது என்ற ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சோனு சர்மாவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Man Murder his wife Mother due to illegal affair


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->