பச்சிளம் மகனை கொடூரமாக தாக்கிய தாயை, தமிழக காவல்துறை ஆந்திரா சென்று கைது செய்தது.! - Seithipunal
Seithipunal


மகனை கொடூரமாக தாக்கிய தாய் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மனலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சார்ந்தவர் வடிவழகன் (வயது 37). ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூரை சார்ந்த பெண்மணி துளசி (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த தம்பதிகள் இருவருக்கும் கோகுல் என்ற 4 வயது மகனும், பிரதீப் என்ற 2 வயது மகனும் என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால் துளசி தனது தாயாரின் வீட்டில் இரண்டாவது மகன் பிரதீப்புடன் வசித்து வந்துள்ளார். நேற்று தனது மகன் பிரதீப்பை துளசி சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது குறித்து வடிவழகன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், கருத்து வேறுபாடால் பிரிந்த தம்பதியில், 2 ஆவது மகன் ப்ரவீனுடன் வசித்து வரும் துளசி தனது மகனை தாக்கியது அம்பலமானது. இதனையடுத்து, துளசியை கைது செய்ய காவல் துறையினர் ஆந்திரா விரைந்தனர்.

இந்நிலையில், குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசியை தேடி ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் இராமப்பள்ளிக்கு சென்ற செஞ்சி சத்தியமங்கலம் காவல் துறையினர், அவரை கைது செய்துள்ளனர். விரைவில் அவர் தமிழகம் அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ இணைப்பு: 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Gingee Andra Pradesh Chittoor Mother Beat Son Video Leaked Issue Police Arrested Mom


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->