சோழர் காலத்து நகைக்கு ஆசைப்பட்டு சிவலிங்கம் உடைப்பு.. அம்மனின் மீது பழி..! உண்மையை கண்டறிந்த காக்கி தெய்வங்கள்.! - Seithipunal
Seithipunal


மரக்காணம் அருகே 2000 வருடம் பழமையான மலை கோவிலில் உள்ள சிவலிங்கத்தை அறங்காவலர் கடப்பாறையால் உடைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் மரக்காணம் அருகே உள்ள பெருமுக்கல் சஞ்சீவி மலையில், சோழர் கால கல்வெட்டுகள் நிறைந்த முக்தியாஜல ஈஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த மலை அடிவாரத்தில் சிவனுடன் காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்த இரு சிவாலயமும் 2000 வருடம் பழைமை வாய்ந்தவை ஆகும். 

இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி பெருமுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவலிங்கத்தை, மர்ம நபர்கள் உடைத்து இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த கோவில் அறங்காவலர் ராமு அளித்த புகாரின் பேரில், பிரம்ம தேசம் காவல் துறையினர் விசாரணை நடந்தி வந்துள்ளனர். 

விசாரணையில், திருடர்களாக இருந்தால் பூட்டை உடைத்து கோவிலுக்குள் வந்திருப்பார்கள், கோவில் கதவுகளின் பூட்டுகள் அப்படியே இருப்பதால் சாவி இருக்கும் நபர் கைவரிசை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை ராமுவின் பக்கம் திரும்பியுள்ளது. 

ராமு முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவிக்கவே, காவல் அதிகாரிகளின் தீவிர விசாரணையில் காமாட்சி அம்மன் தனது கனவில் வந்து சிவலிங்கத்திற்கு அடியில் நான் இருக்கிறேன், என்னை அடைத்து வைத்துள்ளார்கள், நீ வந்து என்னை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் சிவலிங்கத்தை உடைத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், இது சுத்த சமாளிப்பு பதில் என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கிடுக்குபிடி விசாரணையில், கோவில் சோழர் காலத்தில் இருப்பதால் அன்றைய சுத்த தங்கம் மற்றும் வைரங்கள் சாமி பீடத்தின் அடியில் இருக்கும் என்ற நப்பாசையில் சிவலிங்கத்தை உடைத்தும், உள்ளே ஒன்றும் இல்லாததால் எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ராமுவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram Tindivanam Marakkanam Perumukkal Temple Robbery Attempt by Temple Guardian Ramu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->