விழுப்புரம் லாட்டரி தற்கொலை விவகாரம், அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையை சேர்ந்தவர் அருள். இவர் தாலி செய்யும் தொழில் செய்து வந்தார், இவருக்கு சிவகாமி என்ற மனைவியும்,  5 வயதில் பிரியதர்ஷினி, 3 வயதில் யுவஷ்டி, ஒரு வயதில் பாரதி என 3 பெண் குழந்தைகள் இருந்தனர். 

தாலி செய்யும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடன் வாங்கி தந்து குடும்பம்பத்தை நடத்தி வந்துள்ளார். வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் திண்டாடி வந்துள்ளார் அருள், இதற்கிடையே கட்டிய வீட்டை விற்று அவருக்கு இருந்த பெரும்பகுதி கடனை அடைத்துள்ளார். 

தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்காததால், விரக்தி அடைந்து அவர் 3 நம்பர் லாட்டரி சீட்டை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் தொகை அதிகமானதால், கடன் வாங்கியவர்களிடம் அதை திரும்ப கட்ட முடியாமல் திணறிய அருள், விரக்தியடைந்து தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்படி, சயனைடு வாங்கி வந்து அருள் தனது 3 மகள்களுக்கும் கொடுத்து விட்டு, அதை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து மனைவியுடன் தானும் சயனைடு குடித்து, நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

 

இதைதயடுத்து, விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 140 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், விழுப்புரத்தில் சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத லாட்டரி சீட்டு உடந்தையாக இருந்த புகாரில் இரண்டு பெண் காவலர்கள் உட்பட 3 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

villupuram lottery suicide police transfer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->