மலரஞ்சலி செலுத்த கட்டுப்பாடு..!! கிராம மக்களின் முடிவால் குவியும் பாராட்டு..!!! - Seithipunal
Seithipunal


ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மலரஞ்சலி செலுத்துவது தொன்று தொட்டு வரும் வழக்கம். ஆனால் நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் 2ம் சேத்தி என்ற கிராமத்தில் உள்ள சாந்தான் வெளி, அகரம் என்ற இரண்டு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களுக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக ஒரு வினோத முடிவை எடுத்துள்ளனர். அந்த கிராம மக்கள் சார்பில் இறந்தவருக்கு ஒரே ஒரு மாலையை மட்டும் அணிவிப்பது என முடிவு செய்துள்ளனர்.

இறுதி சடங்குகளில் மாலை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளனர். இறந்தவர்களுக்கு அணிவிக்கப்படும் மாலைகள் இறுதி ஊர்வலத்தின்போது சாலை நெடுகிலும் வீசப்படுகிறது. இவ்வாறு வீசப்படும் மாலைகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

இதன் காரணமாக இறந்தவர்களுக்காக அணிவிக்கப்படும் மாலைகளால் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்காக ஒரே ஒரு மாலை போதும் என்ற அறிவிப்பை கிராம மக்கள் வெளியிட்டுள்ளனர். ஆயக்காரன்புலம் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பலரும் பாராட்டு வருகின்றனர்.

இறந்தவர்களுக்கு போட மாலை கொண்டு வருபவர்கள் மாலைக்கு பதில் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.200 வழங்கவும், அந்த தொகையை இறுதி சடங்கிற்கு பயன்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதி சடங்கின்போது வசூல் செய்யப்படும் பணத்தை வசதி படைத்தோர் வேண்டாம் என்று கருதினால் அந்த பணத்தை ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து ஏழ்மையான குடும்பத்தில் நிகழும் இறப்புக்கு செலவு செய்யலாம் என்ற முடிவை கிராம மக்கள் எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villagers restrict paying floral tributes to the dead


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->