திருவள்ளுவர் விவகாரத்தில்., வெகுண்டெழுந்த விஜயகாந்த்..!  - Seithipunal
Seithipunal


இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருவள்ளுவருக்கு காவித் துண்டு அணிவித்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 

பிள்ளையார்ப்பட்டியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை மர்ம ஆசாமிகளால்  சேதப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் பல அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்துள்ளனர். இந்நிலையில் பலரும், திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மதசாற்றப்பட்டவர் என்றும் விவாதம் செய்து வருகின்றனர். 

அதன் பின்னர் பிள்ளையார்ப்பட்டியில் சேதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பல கட்சி தலைவர்களும் அதன் பின்னர் நேரில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு தற்போது மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் செய்ய திருவள்ளுவர் சிலையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தமிழுக்கும், தமிழர்களுக்கும் திருவள்ளுவர் பொதுவானவர். அவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. எந்த கட்சியாக இருந்தாலும் திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்." என கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth about thiruvallur statute


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->