வாகன ஓட்டிகளுக்கு காதில் தேனை பாய்ச்சும் செய்தி.! இனிமே டிராபிக் போலீசை பார்த்து பயம் வேண்டாம்.!  - Seithipunal
Seithipunal


போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை தமிழகத்தில் குறைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 

அதன்படி மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவருக்கு இரண்டாயிரத்தில் இருந்து பத்தாயிரம் ஆகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 500 முதல் 5,000 ஆகவும், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணிக்கும் பட்சத்தில் ரூபாய் 2,000 ஆகவும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

nitin gadkari, seithipunal

இதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், இது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகை தமிழகத்தில் குறைக்கப்படும் என்றும், இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு விரைவில் மகிழ்ச்சியான அறிவிப்பை கொடுப்போம் என்றும், கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayabasker pressmeet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->