நாங்கள் ஏன் அரசியலுக்கு வந்திருக்கிறோம் - விஜய பிரபாகரன் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் மே மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக-பாமக-பாஜக-த.மா.க உட்பட கூட்டணி கட்சிகளும், திமுக-காங்கிரஸ்-மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், மக்கள் நீதி மய்யம், அமமுக-தேமுதிக ஆகிய கூட்டணி கட்சிகளும், நாம் தமிழர் கட்சியும் களம்காண்கிறது. 

அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் வெற்றிக்காக அனல்பறக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமமுக கூட்டணியில் களம்காணும் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் சார்பாக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சுதீஷ் ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தேமுதிக சார்பில் விருத்தாச்சலம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்திற்கு, அவரது மகன் விஜய பிரபாகரன் ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இது தொடர்பான பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், " குடும்பத்துடன் பிழைக்க நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு உழைக்க நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம். தமிழகத்தில் எங்களது அணி அமோக வெற்றியை அடையும் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijaya Prabhakaran Talks about Political Entry at Virudhachalam 30 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->