உன்னால் முடியும் என்ற கோட்பாடுடன், உழைத்து உயர்ந்த விஜய் மக்கள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


விஜய் மக்கள் இயக்கத்தினர் 115 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அடைந்துள்ளனர்

தமிழகத்தில் கடந்த அக்.6 & 9 ஆகிய தேதிகளில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அக்.12 ஆம் தேதியான நேற்று வாக்குகள் எண்ணிக்கை நடைபெற தொடங்கி, ஊரக உள்ளாட்சி வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலை போல, திமுக தலைமையிலான கூட்டணி ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி அடைந்துள்ளது. ஒன்றிய கவுன்சிலர்களில் 1381 இடங்களில் திமுக கூட்டணி 1009 இடங்களை பெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலரில் 140 இடங்களில் 138 இடங்களை பெற்றுள்ளது. 

அதிமுக கூட்டணியை பொறுத்த வரையில் மாவட்ட கவுன்சிலரில் 2 இடங்களிலும், ஒன்றிய கவுன்சிலரில் 215 இடங்களிலும் வெற்றி அடைந்துள்ளது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக கருதப்படும் பாட்டாளி மக்கள் கட்சி 47 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பெற்றுள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களையும், தேமுதிக 1 இடங்களையும், சுயேட்சைகள் 95 இடங்களையும் பெற்றுள்ளனர். மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஊரக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் ஒரு இடம் கூட வெற்றி அடையவில்லை. 

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் 115 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அடைந்துள்ளனர் என்று நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில், இவர்களில் 115 பேர் வெற்றி பெற்றதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Makkal Iyakkam Won Local Body Election 115 Places They Conduct 169 Places to Elect


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->