பறவைகளுக்காக தியாகம்... வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்...!! - Seithipunal
Seithipunal


வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் சிவகங்கையில் இருந்து ஏறத்தாழ 41கி.மீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து ஏறத்தாழ 34கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து ஏறத்தாழ 45கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில், பல ஏக்கர் பரப்பளவில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 

பசுமையாக இயற்கை எழிலுடன் காணப்படும் இந்த சரணாலயம் குளிர்காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கான இயற்கை வாழ்விடமாகும்.

உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சமர்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற பல வகையான பறவைகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் இங்கு அடைகாத்தலுக்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக உள்ளது.

இதமான தட்ப வெப்பநிலை காலங்களில் ஆயிரக்கணக்கான பறவைகளை இவ்விடம் ஈர்க்கிறது.

விதவிதமான பறவைகள், காலையில் இரை தேடிச் சென்று, மாலையில் சரணாலயத்தில் வந்து கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.

இக்கிராம மக்கள், தீபாவளி மட்டுமல்லாது எந்த நிகழ்ச்சிக்கும் வெடி வெடிப்பதில்லை. பறவைகளுக்காகத் தங்களின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்து வருகிறார்கள்.

இவர்களைப் பாராட்டி, வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு இனிப்புகளை வழங்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vettangudi bird sanctuary


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->