பராமரிப்பின்றி சிதைந்து கிடக்கும் வேப்பூர் அரசு மருத்துவமனை.! பொதுமக்கள் எடுத்த முடிவு.!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று இயங்கி வந்தது 13 ஆண்டுகளுக்கு முன்னதாக இதன் தரம் உயர்த்தப்பட்டு பொது மருத்துவமனையாக அந்த பகுதி கிராம மக்களுக்கு செயல்பட்டுவந்தது.

தினமும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் கிராமத்திலிருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 9 மருத்துவர்கள் பணிபுரிந்த இந்த மருத்துவமனையில் தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சைக்கு அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. முறையான சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

சில நாட்களில் மீட்டிங் எனக் கூறி மருத்துவர்கள் முன்னதாகவே சென்று விடுகின்றனர். மேலும், பல நாட்களில் இரண்டு பேர் மட்டுமே வேலை பார்க்கும் நிலையும் ஏற்படுகிறது. தினமும் கர்ப்பிணிகள் 40-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பிரசவத்திற்கு ஏற்ற உபகரணங்கள் இங்கு இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. விபத்து எதிர்பாராத அடிதடி போன்ற நிகழ்ச்சிகள் சம்பவங்கள் ஏற்பட்டால் எக்ஸ்-ரே இருப்பதற்கும் பணியாளர் மற்றும் உபகரணங்கள் இல்லாத நிலை இருக்கிறது.

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்கள் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து 30 கிலோ மீட்டர் உள்ள பெரம்பலூர் அல்லது அரியலூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பலர் உயிர் இழந்து விடுகின்றனர். மருத்துவர்கள் காலை 8 மணிக்கு பணிக்கு வந்து மதியமே செல்ல வேண்டும் என்பதுவிதிமுறை. ஆனால், மருத்துவர்கள் மதியத்திற்கு மேல் தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். மருத்துவர் இல்லாததால் வரும் நோயாளிகள் மாத்திரை மட்டும் வாங்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.

கழிவறையும் சரிவர பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும் என்பதுதான் இந்த மருத்துவமனையின் உத்தரவு. ஆனால், தற்பொழுது இருக்கும் சூழ்நிலையை வேறு இரவு நேரங்களில் செவிலியர்கள் மட்டுமே இருக்கின்றனர். அருகே உள்ள கிராம மக்கள் இதுகுறித்த கண்டன போஸ்டர்களை ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். தேவையில்லாத உபகரணங்களை நீக்கி தேவையான அத்தியாவசிய உபகரணங்களை மருத்துவமனைக்கு கொடுக்க வேண்டும் என்றும், மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

veppur government hospital were destroy


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal