இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன்?.. வெளியான கண்ணீர் தகவல்.. வேலூரில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியை அடுத்துள்ள மாருதி நகர் பகுதியை சார்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரட்டை மகள்கள் இருக்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் இரு மகள்களான பத்மபிரியா மற்றும் ஹரிப்பிரியா மாடியில் இருக்கும் அறைக்கு சென்றுள்ளனர். 

தந்தை பாலசுப்பிரமணியன் வெளியே சென்று இருந்த நிலையில், மகள்கள் குறித்து விசாரிக்கையில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும், இருவரும் மேலே இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து பாலசுப்பிரமணியன் அமைதியாக இருக்கவே, மாலை 4 மணி ஆகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்து மாடிக்கு சென்றுள்ளனர். 

இந்த சமயத்தில், ஒருவர் மினிவிசிறியில் மற்றொருவர் இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

இந்த விசாரணையில், தாய் - தந்தை இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததே இந்த சோக முடிவிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டையிட்டதும், குழந்தைகளின் மன அழுத்தம் அதிகமாகி குழந்தைகள் இருவரும் சோக முடிவு எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. சிறுமிகள் இருவரும் பதினோராம் வகுப்பு பயின்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தங்களுக்குள் எந்த விதமான சண்டை இருந்தாலும், அதனை இருவரும் அமைதியாக அமர்ந்து பேசி தீர்த்துக்கொள்வது அல்லது பிள்ளைகள் இல்லாத நேரம் விவாதம் நடத்தி சுமூகமான முறையில் தீர்வு காணலாம்... பெற்றோர்களின் அமைதியற்ற சண்டை குழந்தைகளின் மனதை எந்த அளவிற்கு பாதித்து இருந்தால், இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பார்கள் என்பதை புரிந்துகொண்டு செயல்படுவது சாலச்சிறந்தது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore twin sisters suicide police investigation report


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->