5 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து வேலூர் எஸ்.பி உத்தரவு! - Seithipunal
Seithipunal


இரவு நேர பணியின் போது சரியாக வேலை செய்யாததால் 5 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து வேலூர் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்!

தமிழக ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர பகுதியில் இருந்து கஞ்சா மற்றும் செம்மரம் கடத்தல் நடைபெறுவதால் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவு பேரில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வாகன தணிக்கையில் ஐந்து காவலர்கள் பணியில் இருந்தனர். அச்சமயத்தில் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி செய்த ஆய்வின் போது ஐந்து பேரும் சரிவர பணி செய்யவில்லை. இதனால் பணியில் இருந்த ஐந்து காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணனுக்கு குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி பரிந்துரை செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் காட்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஸ்ரீராம், தலைமை காவலர் நாராயணசாமி மற்றும் மோதிலால் , மேல்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விஜயன், முதன்மைக் காவலர் ஜெகதீசன் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் "இரவு நேர பணிகளில் சரிவர செய்ய பணியாற்றாத காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore SP ordered to dismiss 5 policemen


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->