வேலூர் தேர்தலுக்கு முன் வெளியான அதிரடியான உத்தரவுகள்! மீறினால் சிறை செல்ல நேரிடும்!  - Seithipunal
Seithipunal


வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை 6 மணியோடு முடிவடைகிறது. வரும் 5ஆம் தேதி வேலூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் நாளை பிரச்சாரம் முடிவடைவது முதல் வாக்குப்பதிவு முடியும் வரை அங்கு தேர்தல் தொடர்பான எந்த கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது எனவும், திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர்  போன்ற எந்த சாதனம் வாயிலாகவும், தேர்தல் விவகாரத்தை பொது மக்களின் பார்வைக்கு வைக்க கூடாது என கடுமையான  உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்கள். 

இந்த கட்டுப்பாடுகளை மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து ஒரே தண்டனையாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore lok sabha election conditions after campaign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->