மலைக்குகையில் ஒரே துர்நாற்றம்.. உள்ளே சென்ற காவல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. விசாரணையில் ஏற்பட்ட திருப்பதால் பகீர்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு கீழ்கொத்தூர் கிராமத்தை சார்ந்தவர் அன்பு (வயது 42). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 

அன்புவின் 2 மகள்களுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. வேலூரை அடுத்துள்ள கருகம்பத்தூர் பகுதியை சார்ந்தவர் வத்சலா. இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், இவரது மகனுடன் வசித்து வந்துள்ளார். வத்சலாவின் மகனிற்கு திருமணம் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, அவர் தனியாக மனைவியுடன் வசித்து வருகிறார். 

அன்பும் - வத்சலாவும் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த காரணத்தால், இதன்போது இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாகவே தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற வத்சலா மாயமாகவே, கடந்த 8 ஆம் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

காவல் துறையினரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், காட்பாடியை அடுத்துள்ள வள்ளிமலை பகுதியில் உள்ள குகையில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதாக மேல்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மாயமான பெண்மணி வத்சலா கொலை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் அன்பை சந்தேகத்தின் கீழ் காவல் துறையினர் விசாரணை செய்தனர். 

இந்த விசாரணையின் போது, எங்கள் இருவருக்கும் கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டது என்றும், அவர் திருமணம் செய்ய கூறி தொடர்ந்து வற்புறுத்தியதால் இங்கு அழைத்து வந்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அன்புவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Illegal Affair Murder Police Investigation and Discovered Mystery of Death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->