காற்றுக்காக கதவை திறந்து, வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையால் 3 பேர் காயம்.. பெரும் போராட்டத்திற்கு பின்னர் பிடிபட்டது.!! - Seithipunal
Seithipunal


குடியாத்தம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தாய், மகள், மகன் ஆகியோரை தாக்கிய சிறுத்தை வீட்டில் ஆக்ரோஷத்துடன் உலாவும் சம்பவம் நடைபெற்றது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் எர்த்தங்கல் - கலர்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் வேலாயுதம். நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கிய நிலையில், வேலாயுதம் குடும்பத்தினர் அசந்து உறங்கியுள்ளனர். 

நள்ளிரவு 2 மணியளவில் எங்கிருந்தோ வந்த சிறுத்தை ஒன்று, வீட்டிற்குள் புகுந்து இருக்கிறது. வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை வேலாயுதத்தின் மனைவி பிரேமா, அவரது மகன் மனோகரன், மகள் மகாலட்சுமி ஆகியோரை தாக்கியுள்ளது. 

சிறுத்தையிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என வீட்டை விட்டு வெளியே வந்துவிட, வீட்டிற்குள் இருந்த அறையில் கோழி சத்தம் கேட்டு சிறுத்தை அங்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டினை பூட்டிவிட்டு அனைவரும் பத்திரமாக வெளியே வந்துள்ளனர். 

காயமடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Gudiyatham Cheetah Arrived After Long time Try Forest Dept Rescued 15 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->