வேலூரில்., சொத்துக்காக கடத்தப்பட்ட மாணவி வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்., மாணவிக்கு நேர்ந்த துயரம்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியை அடுத்துள்ள நெக்கினி மலை கிராமத்தை சார்ந்த 13 வயதுடைய மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு பயின்று வருகிறார். 

இவரின் தந்தைக்கும் அதே பகுதியை சார்ந்த குமார் என்பவரின் குடும்பத்தாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்., நேற்று இரவின் போது வீட்டில் குடும்பத்தாருடன் மாணவி உறங்கி கொண்டு இருந்துள்ளார். 

அந்த நேரத்தில்., இவர்களின் இல்லத்திற்குள் சுமார் 2 மணியளவில் புகுந்த கும்பலானது மாணவியின் வாயில் துணியை வைத்து அமுக்கி., அவரை அங்குள்ள மலை பகுதிக்கு கடத்தி சென்று., கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

உறக்கத்தில் இருந்த தந்தை எழுந்த சமயத்தில் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து திகைத்த நிலையில்., மயக்கத்தில் இருந்த மாணவி மயக்கம் தெளிந்ததை அடுத்து., ஐவரின் பிடியில் இருந்து தப்பி வீட்டிற்கு வந்து தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை ஆத்திரத்தில் நிற்கவே., இவர்களின் இல்லத்திற்கு குமார் மற்றும் அவரது கேடுகெட்ட கும்பல் வருகை தந்துள்ளது. இதனை கண்டு ஆத்திரமடைந்த தந்தை., குமாரை கத்தியால் குத்தியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே., சிறுமியின் தந்தை அடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்த தகவலானது காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து., சிறுமி மற்றும் அவரது தந்தையை மீட்டனர். மேலும்., சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore girl kidnapped case a girl sexual harassment by gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->