வேலூரில் வார சந்தைகள் செயல்பட தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இரண்டாம் கொரோனா பரவல் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரமாகவே மெல்ல உயர தொடங்கிய தமிழக கொரோனா பாதிப்பு, மீண்டும் உச்சகட்டத்தை எட்டிவருகிறது.

இதனால் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது. மருத்துவமனைகளில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் வருகை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் வார சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore District Collector Announce Weekly Marketes Banned Tempravorily 12 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->