அதிரடியாக குறைந்த காய்கறிகள் விலை.. நிம்மதியில் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர்கள் உட்பட வந்து சென்ற பலருக்கு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து தற்காலிகமாக கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. 

இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர தொடங்கியது. தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சூழலில் காய்கறியின் விலை கணிசமாக உயர தொடங்கியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது மீண்டும் காய்கறிகளின் விலையை கணிசமாக குறைய தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியில் உள்ளனர். சென்னையில் மே 6 க்கு பிறகு கடுமையாக ஏறத் தொடங்கிய காய்கறிகளின் விலை, தற்போது குறையத் தொடங்கியது. திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது .

தக்காளி ஒரு கிலோவுக்கு ரூ.10 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.25 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.15, பீன்ஸ் ரூ.60 ஆகவும், கேரட் ரூ.20 ஆகவும், கத்தரிக்காய் மற்றும் முள்ளங்கி ரூ.20 ஆகவும், வெண்டைக்காய் ரூ.25 ஆகவும், அவரைக்காய் ரூ.30 ஆகவும், புடலங்காய் ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது., வெண்டைக்காய், முள்ளங்கி ரூ.25 என விற்பனை செய்யப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vegetables price getting down in thirumalisai market at chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->