19 ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம் எடுக்கும் வீரப்பன் வழக்கு., கலக்கத்தில் வீரப்பன் கூட்டாளிகள்!! - Seithipunal
Seithipunal


கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமார், கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியும் மற்றும் கர்நாடக மாநில எல்லையான தாளவாடி உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்திச் செல்லப்பட்டார். காவேரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தரவேண்டும் உள்ளிட்ட தமிழகத்துக்கு பலன் அளிக்கும் பல நல்ல கோரிக்கைகளை கர்நாடக அரசுக்கு நிபந்தனைகளை வைத்த வீரப்பன் 108 நாட்கள் நடிகர் ராஜ்குமாரை பிணைக்கைதியாக வைத்திருந்து  பின்னர் உயிருடன் விடுவிக்கப்பட்டார். 

108 நாட்கள் பிணைக்கைதியாக இருந்த பின்னர் விடுவிக்கப்பட்ட நடிகர் ராஜ்குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தான் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக இருந்த 108 நாட்களும் தன்னை வீரப்பன் நல்ல முறையில் பார்த்துக்கொண்டதாக தெரிவித்தார் 

ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தில் வீரப்பன் அவரது கூட்டாளிகளான கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன் உள்ளிட்ட 9 பேர் மீது தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தற்போது மாயாவி வீரப்பன், நடிகர் ராஜ்குமார் இறந்து விட்டனர் எனினும் இந்த வழக்கு 19 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து கோபி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கோவை சிபி சி ஐ டி துணை கண்காணிப்பாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகவும், அதை கீழமை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

veerappan case new judgement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->