வீரப்பனின் சகோதரர் மாதையன் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டு, கர்நாடக - தமிழக எல்லையில் கர்நாடகத்தின் மாநில எல்லை ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தவர் வீரப்பன். இவரது சொந்த அண்ணன் மாதையன் (வயது 87). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி வன அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 

ஆயுள் கைதியான மாதையன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 22 வருடத்திற்கும் மேல் சிறையில் இருந்து வருகிறார். தற்போது, அவருக்கு 87 வயதாகும் நிலையில், வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். 

கடந்த 2018 ஆம் வருடம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், நெஞ்சு வலியும் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிக்சிஹாய்கக அனுமதி செய்யப்பட்டார். சிகிச்சை முடிந்து பின்னர் சிறைக்கு திரும்பிய நிலையில், இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் மாதையன் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாதையனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veerappan Brother Mathayan Admit Salem Hospital to Treatment 31 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->