அடுத்த மாஸ்டர் பிளானுடன் தமிழக அரசு.. கொந்தளிக்கும் டிடிவி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் சரணாலயமானது மிகவும் பிரபலமான பறவைகள் சரணாலயமாகும். இந்த சரணாலயத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பறவைகள் வந்து தங்கியிருந்து செல்கிறது. இதனால் வனத்துறையினர் வேடந்தாங்கலை சுற்றியுள்ள 5 கிமீ பரப்பளவை வனத்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

இதன்மூலமாக இந்த 5 கிமீ சுற்று வட்டாரத்திற்கு தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலைபேசி கோபுரங்கள் அமைக்க அனுமதி கிடையாது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட் பதிவு செய்துள்ளார்.

இது குறித்த ட்விட் பதிவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்கி கட்டுமானங்களைச் செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உலகம் முழுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அப்படிப்பட்ட இடமான வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vedanthangal Bird Sanctuary area reduced by tn govt TTV Dhinakaran angry about it


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->