ஆர்எஸ்எஸ் பேரணி நடக்காமல் இருக்க எந்த வடிவத்திலும் அதற்கான வேலையை நாங்கள் செய்வோம்! - விசிக வன்னியரசு! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் வன்னியரசு பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்த விடமாட்டோம் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் "தலைவர் திருமாவளவன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை தமிழ்நாட்டில் நடத்த விடமாட்டோம் என கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை எந்த வடிவத்திலும் தடுத்து நிறுத்த அதற்கான வேலைகளை விசிக செய்யும். ஆர்எஸ்எஸ் என்பது காந்தியை படுகொலை செய்ய இயக்கம். அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சம்சாவுகர் ரயில் தீவைப்பு சம்பத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை எல்லாம் செய்தவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான்.

 அப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பு தமிழகத்தில் காலூன்றவோ அந்த அமைப்பு அணிவகுப்பு நடத்தவோ விடுதலை சிறுத்தைகள் அனுமதிக்காது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை தடுப்பதற்கான செயல் திட்டங்களை ஆர்எஸ்எஸ் அறிவித்தவுடன் நாங்களும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த தொடங்குவோம். பாரதிய ஜனதா கட்சி அணி வகுப்பு நடத்துவது என்றால் அது ஒரு அரசியல் கட்சி என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் என்ன நோக்கத்திற்காக பேரணி நடத்துகிறார்கள் என்ற கேள்வி நாங்கள் வைத்ததற்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கம் 5 பார்ப்பனர்களைக் கொண்டு துவங்கப்பட்ட இயக்கம். பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் ஆர்எஸ்எஸ்.

 

சனாதனத்தை நடைமுறைப்படுத்தவும் அதை நிலை நிறுத்தவும் தொடங்கப்பட்ட இயக்கம் தான் ஆர்எஸ்எஸ். காந்தியை படுகொலை செய்தலில் மிக முக்கியமான காரணமாக இருந்தது ஆர்எஸ்எஸ் இயக்கம். இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் இயக்கம் 1948-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று 1995 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பிலும் ஆர்எஸ்எஸ் இயக்கம் சம்பந்தப்பட்டதால் தடை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அதிக முறை தடை செய்யப்பட்ட இயக்கம் என்றால் அது ஆர்எஸ்எஸ் இயக்கம் தான். வடகிழக்கு மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி மூலம் ஒரு பதட்டமான சூழ்நிலையை இதற்கு முன் உருவாக்கி உள்ளனர். மாநில உரிமைகளுக்காக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தினால் நாங்களே ஆதரிப்போம்" என அந்த பேட்டியில் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK will do any form to prevent the RSS rally from happening


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->