சிறுமிகளின் ஆபாச வீடியோ..! விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக வெடித்து கிளம்பும் மக்கள் புரட்சி - தேர்தல் நேரத்திலேயே அரங்கேற்றிய அட்டூழியம்..! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் விடுதலைசிறுத்தை கட்சியை சார்ந்த ஆசிரியர் ஒருவர் சிறுமிகளை ஆபாசவீடியோ எடுத்து மிரட்டுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை பக்கத்தில் உள்ள ஜம்பை என்னும் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுமிகளை ஆபாச வீடியோ எடுத்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஆசிரியர் கணநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஆபாச வீடியோ எடுத்த கைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது.

விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் இந்த விஷயத்தை மூடி மறைக்க அப்பாவி கிராம மக்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து உள்ளதாகவும் அதில் வழக்கு பதிவு செய்ய விடுதலை சிறுத்தை கட்சி சேர்ந்தவர்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏழ்மையில் இருக்கும் சிறுமிகளின் பெற்றோர்கள் புகார் கொடுக்க அச்சம் படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பொள்ளாச்சிக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தியவர்களுக்கு இப்போது குரல் வளை அடைத்துக் கொண்டதா..? தேர்தல் சமயத்திலேயே நீங்கள் இவ்வளவு அராஜகம் என்றால் முடிந்தவுடன் மக்கள் வாழவே முடியாது என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கண்ணீர் வடிப்பதை காணும் போது கண் கலங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck party teacher arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->