மூட்டைமூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்!! கையும் களவுமாக சிக்கிய விசிக முக்கிய பிரமுகர்!! - Seithipunal
Seithipunal


வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக குட்கா குடோன் இயங்கி வருவதாக சென்னையைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னையிலிருந்து வேலூருக்கு விரைந்து வந்த போலீஸ் கண்காணித்து கொண்டு இருந்தனர். இதனையடுத்து சைதாப்பேட்டை பி.டி.சி ரோடு முகமதுபேக் பங்களா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகள் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் சுமார் நான்கு டன் எடையிலான 70 மூட்டைகளிலிருந்த தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளைக் போலீஸ்சார் கைப்பற்றினர். மேலும், போதை பொருட்களை தயாரிக்க தேவையான 28 லிட்டர் கெமிக்கல் மற்றும் பாக்கெட்டையும் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக, வீட்டின் உரிமையாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் முகமது இப்ராகிம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்பாஷா ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck party member sale gutka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->