திமுக மட்டுமல்ல.,! காங்கிரசிலும் சாதி தீண்டாமை!! அந்த கட்சிக்கு இப்படிப்பட்ட நிலையா வரணும்?!  - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டும்  சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என தனி தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுகவின் உறுப்பினராக மாறி உதயசூரியன் சின்னத்திகும் போட்டியிடுகின்றனர்.

Image result for dmk vck seithipunal

இந்நிலையில், திமுகவின் சுவர் விளம்பரம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் விசிக கவனமாக ஒதுக்கப்படுகிறது. பேருந்து ஒன்றில் ஒரு இலைஞர் ஏறி நின்று மேலே கட்டப்பட்டிருந்த திமுக கூட்டணிக் கட்சிகளின் கொடியில் விசிக கொடியை மற்றும் அகற்றும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு சர்ச்சையை கிளப்பியது.

Image result for dmk vck seithipunal

மேலும், விசிக பிரச்சாரங்களுக்கு செல்லும் இடங்களில் எங்கு செல்ல வேண்டும் என ஒரு பட்டியலும், இங்கெல்லாம் செல்லக்கூடாது என ஒரு பட்டியலும் தருவதாக விசிக இளைஞர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதில் திமுக கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், திமுகவிற்கு வெறும் ஆதரவு மட்டுமே அளிக்கும் சில தலைவர்களின் புகைப்படம் கூட இடம் பெற்றுள்ளது. ஆனால், விசிக தலைவர் திருமாவளவனின் புகைப்படம் அதில் இல்லை.



 

இதுகுறித்து விசிக்காவின் தொண்டர்கள் கடுங்கோபத்தில் கொந்தளிக்கவே, இது பிரச்சனையாக மாறியது. அதன்பின்னர் அந்த படம் நீக்கப்பட்டு திருமாவளவன் புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திருமாவளவனை சாதி காரணத்திற்காக ஒதுக்கி அரசியல் செய்கிறது. ஆனால், திமுக காங்கிரஸ் தலைவர்கள் பலர் எங்கள் கூட்டணி,  ஜாதி, மத சார்பற்ற கட்சி கூட்டணி" என்று சொல்லிக் கொள்வது தான் வேதனையே..!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck may be ignored by congress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->