போலீஸை சாதி பெயர் சொல்லி திட்டிய விசிக நிர்வாகி... தட்டி தூக்கிய வேலூர் எஸ்.பி.. விசிகவினர் குவிந்ததால் ஆரணியில் பதற்றம்..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்த ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது அலுவலகமாக மாற்றி பயன்படுத்துவதாக அதனை குத்தகை எடுத்த திலகவதி என்பவர் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஆரணி நகர காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் சாதி அடிப்படையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இரவோடு இரவாக விசிக நிர்வாகி பாஸ்கர் கைது செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த விசிக பிரமுகர்கள் 200க்கும் மேற்பட்டோர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஆரணி மணி கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பின்னர் அனைவரும் பேரணியாக சென்று ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை டி.எஸ்.பி ரவிச்சந்திரன், வேலூர் நகர காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து வேலூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் ஆரணி நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK admin arrested for insulting police by caste name


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->