விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓ.. கையும் களவுமாக சிக்கும் காட்சி..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிதி உதவிபெற மனு அளிக்க வந்த விவசாயிகளிடம் வி.ஏ.ஓ. லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்நிது உதவி வழங்கும் வகையில் “பிரதம மந்திரி கிசான்சம்மான் நிதி” என்ற திட்டம் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.

ரூ.2 ஆயிரம் வீதம், 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிகூனம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள், அங்கு கிராம நிர்வாக அலுவலரை (வி.ஏ.ஓ) அணுகி, மனுஅளிக்க வந்துள்ளனர்.

அவர்களிடம் வி.ஏ.ஓ. லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்தவீடியோ, வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இச்சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vao ask bribery from farmers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->