தஞ்சாவூர் || திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் காடுவெட்டி விடுதியை சேர்ந்த 13 பேர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது வேன் திருவோணம் பகுதி அண்ணா சிலை அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் ஓட்டுநர் வேனை நிறுத்தம் முயன்றுள்ளார். ஆனால் வேன் தறிக்கெட்டு ஓடி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 13 பேரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக திருவோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்பு அங்கிருந்து அனைவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவோணம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Van overturned accident in Thanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->