அடுத்த 3 மாதத்துக்குள் மழை பெய்தே ஆக வேண்டும் - அபாயத்தை முன்வைக்கும் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அடியோடு நின்றது. வைகை, பெரியாறு அணைகளில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

தென் மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

மேலும் 4 ஆண்டு களுக்குபிறகு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடபட்டு வருகின்றனர்.

ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றி யதால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அடியோடு நின்று ள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 116.45 அடியாக உள்ளது.நீர்வரத்து இல்லை. 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 50.03 அடியாக உள்ளது.

நீர்வரத்து இல்லாத நிலையில் 60 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.20 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. திறப்பு இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 89.21 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

அணைகளின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் தேனி, மதுரை மாவட்ட குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தற்போது உள்ள நீரை கொண்டு அடுத்த 3 மாதத்துக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். அதனைத் தொடர்ந்து மழை பெய்தால்மட்டுமே சமாளிக்க முடியும். இல்லையென்றால் கோடை காலத்தில்கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்அபாயம்உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaigai-dam-water-opening-for-people.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->