மழ நின்னதும் நின்னுச்சு எல்லாம் போச்சு.! மதுரை மக்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ள நிலவரம்.! - Seithipunal
Seithipunal


நீர்மட்டம் குறைந்து வருவதால் வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது .

வைகை அணை இந்த ஆண்டில் 2 முறை நிரம்பியதையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள இரண்டு போக பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக தேனி மாவட்டத்தில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்ததால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 60 அடிக்கும் மேலாக நீடித்து வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தேனி மாவட்டத்தில் போதுமான அளவு பெய்யாத காரணத்தால் வைகை அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. அதே சமயம் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்காக தொடர்ந்து திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

முதல் போக பாசன பகுதிகளுக்கு வருகிற 20 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் போக பாசனத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது.

ஆனால் தற்போது அணையில் இருக்கும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது. இந்த தண்ணீரின் மூலம் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதிலும் மதுரை மாநகர மக்களுக்கு வைகை அணை மட்டுமே பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளதால் வைகை அணையில் தண்ணீரை இருப்பு வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

நீர் இருப்பு குறைவாக உள்ளதால் மதுரை மாவட்ட இருபோக பாசனப்பகுதிகளுக்கும் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில நாட்கள் இடைவெளி விட்டு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் 5 நாட்கள் இடைவெளிவிட்டு தண்ணீர் குறிப்பிட்ட நாட்களுக்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழையே பெய்யாத காரணத்தால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து குறையும் நிலை ஏற்பட்டது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vagai dam current status


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->