சற்றுமுன் : திடீர் அவசர வழக்கு! சற்று நேரத்தில் விசாரணை தொடக்கம்! நாளை திமுக பேரணி நடக்குமா?!  - Seithipunal
Seithipunal


நாடுமுழுவதும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பேரணி நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அழைப்புகளும் 98 அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை நடத்தவிருக்கும் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் மன்றத்தின் வாராகி என்பவர் தொடர்ந்த இந்த மனுவானது அவசர வழக்காக இன்று இரவு 8 மணிக்கு விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா சிறப்பு அமர்வு விசாரணை செய்கிறது. இரவு 8 மணியளவில் உயர்நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை பேரணி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

urgent case against dmk rally of against CAA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->