ரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..? திருச்சியில் திடுக்கிடும் பொதுமக்கள் - களமிறக்கப்படும் அதிகாரிகள்..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சிவனச்சரகத்திற்குட்பட்ட குறுமலை மற்றும் பாலாமலை காப்புகாடுகளுக்கு நடுவே உள்ளது குப்பனார்பட்டி குறுமலைக்கள்கிராமம்.

இங்கு கடந்த மே 10-ந் தேதி இரவு விவசாயி வடிவேல் என்பவரது செம்மறி ஆடு பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள் ஆடுகளை குதறியுள்ளது.

இதில் 8 ஆடுகள் உயிரிழந்தன.6 ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளன. இதே போன்று இப்பகுதியில் ஆங்காங்கே ஆடுகளின் உயரிழப்புகள் நடந்து வருகிறது.

இதுவரை சுமார் 50 ஆடுகள் உயிரிழந்துள்ளன. வனவிலங்குகள் ஆடுகளின் கழுத்து பகுதியை மட்டும் தாக்கி இரண்டு ஆழமான குழிகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஆடுகளின் ரத்தத்தைமட்டும் உறிஞ்சுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் செந்நிறத்தில் நாய் போன்ற வனவிலங்குகள் விவசாய குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவில் அச்சத்துடனே நடமாடுகிறார்கள்.

இதனையடுத்து மாவட்ட வனஅலுவலர் உத்தரவின்பேரில் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனவர்கள் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதி மக்களின் உதவியுடன் வனவிலங்கு குறித்து கண்டறிய குறுமலைக்கான வனப்பகுதியில் முகாமிட்டு மர்ம விலங்குகளை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unknown animal found in trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->