கஞ்சா விற்ற உடுமலைப்பேட்டை கவுசல்யா குடும்பம்! இரவோடு இரவாக சிறையில் அடைப்பு!  - Seithipunal
Seithipunal


கலப்பு திருமணம் செய்து கணவரை தனது சொந்த குடும்பத்தினரிடம் பறிகொடுத்தவர் உடுமலைப்பேட்டை கௌசல்யா. அவருடைய தாய் அன்னலட்சுமி மற்றும் பாட்டி கோதையம்மாள் கஞ்சா விற்ற வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குப்பம்பாளையத்தில் கோதையம்மாள் (கௌசல்யாவின் பாட்டி) என்பவர் வெகுகாலமாக கஞ்சா விற்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த காவல் ஆய்வாளர் சையது பாபு தனது குழுவுடன் கோதையம்மாள் வீட்டிற்கு விரைந்து நடத்திய சோதனையில், அங்கே ஒரு கிலோவுக்கு மேல் கஞ்சா விற்பதற்காக வைத்திருந்தது கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சிக்கி கொண்ட கோதையம்மாளிடம் விசாரணை நடத்த, அவர் பழனியில் இருக்கும் என் மகள் அன்னலட்சமிதான் என்னிடம் விற்பதற்காக கஞ்சா தருகிறார் அதனை தான் நான் விற்கிறேன் என கூறியுள்ளார். 

உடனடியாக பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்க, அன்னலட்சுமியின் வீட்டிற்கு விரைந்த செந்தில்குமார், அன்னலட்சுமியை கைது செய்ய, கோதையம்மாள், அன்னலட்சுமி இருவரையும் கஞ்சா விற்றதாக கைது செய்து, இரவோடு இரவாக மதுரையிலுள்ள பெண்களுக்கான தனிச்சிறையில் அடைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udumalapet gowsalya mother and grandma arrested for kanja sales


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->