தந்தையை நம்பி தயரான உதய்ண்ணா..! உபிகளுக்கு கொடுத்த ஷாக்.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து தற்போது டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. திமுக தரப்பில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சென்னை மேயரின் வேட்பாளராக உதயநிதி போட்டியிடுவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தது. இதை நிரூபிக்கும் வண்ணம் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. 

இளைஞரணி அமைப்பாளரான சிற்றரசு, தென் சென்னை இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா, சிறுபான்மை பிரிவு சபில் உள்ளிட்டோர் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை அளித்துள்ளனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதற்கு, "உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என தெரியவில்லை நடந்தால் நான் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். இடைத் தேர்தலின் போதும் வேட்புமனு தாக்கலில் 
 உதயநிதி பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை வேட்பாளராக உதயநிதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகிறது. சாதாரணமாக கட்சி நிகழ்ச்சி என்றாலே நிர்வாகிகளை கசக்கிப் பிழிந்து பணம் வசூலிக்கும் உதயநிதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் என்ன ஆகுமோ என திமுகவினர் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanithi says about local body election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->