லேடியா? மோடியா? என்று கேட்டார்கள்.. இன்று அவர்தான் எங்கள் டாடி என்கிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


இந்த லேடியா? அல்லது மோடியா? என்று ஜெயலலிதா துணிச்சலாக பேசி இருந்த நிலையில், மோடி தான் எங்கள் டாடி என்றும் சொல்லும் அளவிற்கு அதிமுகவினர் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

திமுகவின் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தந்தையின் செல்வாக்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். 

இவர் தற்போது தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக சொல்லும் அளவில் அதிமுக இருக்கிறது. 

மக்கள் மாற்றத்தை கொண்டு வர தயாராக இருக்கின்றனர். லேடியா? அல்லது மோடியா? என்று ஜெயலலிதா கேட்ட சூழ்நிலை எல்லாம் மாறி, மோடி தான் எங்கள் டாடி என்று அதிமுகவினர் கூறுமளவிற்கு அக்கட்சி உள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin Speech about Modi Vs Jayalalithaa


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->