நாங்க ஆட்சிக்கு வந்ததும் என்ன பன்றோம்னு பாருங்க... உதயநிதி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கோயம்பேட்டில் செய்யப்பட்டு வரும் மக்கள் பாதை அமைப்பினர், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். 

இதன்பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், " தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக மற்றும் அதிமுக நீட் தேர்வினை இரத்து செய்வதாக உறுதியளித்தது. திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்தியும் தமிழகத்தில் நீட் விலக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றியடைந்த அதிமுக இதனை நிறைவேற்றவில்லை. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை, மத்திய அரசு திரும்பி வழங்கியுள்ளது. இதனையும் மக்களிடம் கூறாமல் அரசு மறைந்துள்ளது.

ஜல்லிக்கட்டிற்கு மாபெரும் போராட்டம் நடைபெற்ற பின்னர், அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அழுத்தத்தின் பேரில் அனுமதி வழங்கியது. இதனை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் மேற்கொள்ள இயலவில்லை. திமுக தலைவரின் உறுதிப்படி, சில மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்து, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin Press meet 19 September 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->